ADDED : ஆக 09, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி,:தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா ஆக.12 முதல் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை மேற் கொள்கிறார்.
அம்மாவின் வழியில் மக்கள் பயணம் என்ற பெயரில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு பயணத்தை சசிகலா மேற்கொள்கிறார். முதற் கட்டமாக தென்காசி மாவட்டத்தில் ஜுலை 17ல் துவங்கி 20 வரை மேற்கொண்டார்.
இரண்டாம் கட்ட சுற்று பயணத்தை ஆக. 12 ல் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் துவக்குகிறார். தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுபயணம் மேற்கொள்கிறார். ஆக., 17, 18ல் ஓய்வுக்கு பிறகு ஆக., 19 முதல் 22 வரையிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் 2ம் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நிறைவு செய்கிறார்.