/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமலானால் தமிழகம் ஆதரவு தரும் சொல்கிறார் சபாநாயகர் அப்பாவு

ADDED : செப் 18, 2024 01:31 AM
திருநெல்வேலி:''இந்திய அளவில் மதுவிலக்கு அமல்படுத்தப்படுமானால் அதற்கு தமிழகம் முழு ஆதரவு தரும் ''என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே ராதாபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு மண்டல மைய துவக்க விழாவில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:
மதுவிலக்கு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினும். வி.சி.க., தலைவர் திருமாவளவனும் நாடகமாடுவதாக மத்திய அமைச்சர் முருகன் குற்றச்சாட்டியுள்ளது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். ஒருகட்சி சார்பில் மாநாடு நடத்துகிறார்கள்.
இதைத் தவறு என்று எப்படி கூற முடியும். மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதன்படி தான் ஆட்சி அமையும். அதன் பிறகு ஆட்சியில் உள்ளவர்கள் மக்கள் நலன் சார்ந்து தான் முடிவெடுக்க முடியும்.
இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தும் போது அதற்கு முழு ஆதரவாக தமிழகம் திகழும்.
நடிகர் விஜய் கட்சி துவக்கி இருக்கிறார். அவர் கொள்கையை சொல்லட்டும். முதல் மாநாடு நடக்கட்டும். அவர் வருவதற்கு முன்பாகவே ஏன் கல் எடுத்து எறிகிறீர்கள். ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் வருவதற்கு யாரும் தடையும் விதிக்கவில்லை. தண்ணீரும் உள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி கலெக்டர்கள் பேச்சு வார்த்தை நடத்தி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.