/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாநில தூய்மை பணியாளர் ஆணையம் தேசிய ஆணைய தலைவர் வலியுறுத்தல்
/
மாநில தூய்மை பணியாளர் ஆணையம் தேசிய ஆணைய தலைவர் வலியுறுத்தல்
மாநில தூய்மை பணியாளர் ஆணையம் தேசிய ஆணைய தலைவர் வலியுறுத்தல்
மாநில தூய்மை பணியாளர் ஆணையம் தேசிய ஆணைய தலைவர் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 31, 2024 08:44 PM
திருநெல்வேலி:மாநில அளவில் தூய்மை பணியாளர் ஆணையம் அமைக்க வேண்டும் என தேசிய ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் கேட்டுக் கொண்டார்.
தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினரிடமும் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறியது: மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் குறைவாக வழங்கப்படுவதான புகாருக்கு தேவையான நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில அளவிலான தூய்மைப் பணியாளர் ஆணையம் அமைக்க வேண்டும்.
இந்தியாவில் 11 மாநிலங்களில் மாநில தூய்மைப் பணியாளர் ஆணையங்கள் உள்ளன. தமிழகத்திலும் தூய்மைப் பணியாளர் ஆணையம் அமைக்க வேண்டும். ஏற்கனவே கடந்த ஆண்டு தமிழக கவர்னரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். இதுவரை ஆணையம் அமையவில்லை. தமிழகத்தில் தூய்மை பணியாளர் நல வாரியம் உள்ளது. ஆனால் வாரியத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை. எனவே மாநில ஆணையம் ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் மலக்கழிவு தூய்மை பணியில் மனித உயிரிழப்பு சதவீதம் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது. 1993--2024ம் ஆண்டு வரை 257 பேர் உயிரிழந்துள்ளது வருத்தம் அளிக்கக்கூடியதாக உள்ளது.
புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் 14420 உள்ளது. தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு தொழில் கடனாக மத்திய அரசு 20 லட்சம் ரூபாய் வழங்குகிறது. அதுபோல் மாநில அரசும் கடன் சலுகைகளை வழங்க வேண்டும். கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மாநகராட்சி நிர்வாகமே ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குகிறது. தமிழக அரசும் நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும் என்றார்.
கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
* பணியாளர்களிடம் குறைகளை கேட்கும் போது தனியார் ஒப்பந்த நிறுவன நிர்வாகிகளை கூட்ட அரங்கில் இருந்து வெளியேறும்படி ஆணைய தலைவர் உத்தரவிட்டார்.
* தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விபத்து காப்பீடு பி எப் சீருடைகள் போன்றவற்றை முறையாக வழங்கவில்லை என குற்றச்சாட்டு கூறினர்.
* மலக்குழி தூய்மை பணியில் உயிரிழப்பு சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 14420 என்ற தொலைபேசி ண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆணைய தலைவர் கூறினார். ஆனால் அந்த எண்ணைஅழைத்த போது அது செயல்படவில்லை என பதில் வந்தது.