/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மீன் சின்னத்துடன் கல் மண்டபம்; தாமிரபரணியில் கண்டுபிடிப்பு
/
மீன் சின்னத்துடன் கல் மண்டபம்; தாமிரபரணியில் கண்டுபிடிப்பு
மீன் சின்னத்துடன் கல் மண்டபம்; தாமிரபரணியில் கண்டுபிடிப்பு
மீன் சின்னத்துடன் கல் மண்டபம்; தாமிரபரணியில் கண்டுபிடிப்பு
ADDED : ஆக 08, 2024 11:04 PM

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் துவங்கி துாத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்றில் பல்வேறு கிளை நதிகள் இணைகின்றன. திருநெல்வேலியை அடுத்துள்ள தருவையில் பச்சையாறு இணைகிறது.
ஏற்கனவே இப்பகுதியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொல்லியல் துறைத்தலைவர் சுதாகர் தலைமையில் மாணவர்கள் ஆய்வு செய்து பழமையான கல்வெட்டு ஒன்றை கண்டறிந்தனர்.
இந்நிலையில் எழுத்தாளர் காமராஜ் மற்றும் தோரணமலை முருகன் கோவில் பரம்பரை தர்மகர்த்தா செண்பகராமன், நுாலகர் அகிலன், நிவேக், பெருமாள் உள்ளிட்டோர் தருவையில் பச்சையாறு - தாமிரபரணி இணையும் பகுதியில் ஆய்வு செய்தனர்.
அங்கே ஒரு படித்துறையில், வெள்ளத்தில் ஆற்று மணலில் புதைந்த மண்டபம் கண்டறியப்பட்டது.
அதன் மேல் பகுதியில் விநாயகர் சிலையும், மண்டபத்தின் ஒரு பகுதியில் இரண்டு மீன் சின்னங்களும் நடுவில் ஒரு கல்வெட்டும் உள்ளது.
கல்வெட்டில், 1,600 வைகாசி மாதம் சூரப்ப அய்யன் மகன் வெங்கடேசன் அய்யன் தர்மபத்தினிக்காக செய்துவித்த மண்டபம் என எழுதப்பட்டுள்ளது. இதை தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் அதிகாரி ஆசைத்தம்பி வாசித்து காண்பித்தார்.
இப்பகுதியை மேலும் ஆய்வு செய்தால் தொன்மையான சின்னங்கள் கண்டறிய வாய்ப்புள்ளது.