/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஆசிரியரை தாக்க கத்தியுடன் வந்த மாணவர்கள்
/
ஆசிரியரை தாக்க கத்தியுடன் வந்த மாணவர்கள்
ADDED : ஆக 09, 2024 02:33 AM
திருநெல்வேலி:நெல்லை மாவட்டம், நான்குநேரி தாலுகா அலுவலகம் அருகேயுள்ள சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில், இரு நாட்களுக்கு முன், இப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் சிலர் புத்தகப் பையில் கத்தி வைத்திருப்பதாக தலைமையாசிரியருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் நான்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து அந்த மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, பள்ளியில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட, மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்ததால் அந்த ஆசிரியர்களை தாக்குவதற்காக கத்தியை கொண்டு வந்தது தெரிந்தது.
அந்த மூன்று மாணவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.