/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தெரு நாய்கள் கடித்து இளம்பெண் படுகாயம்
/
தெரு நாய்கள் கடித்து இளம்பெண் படுகாயம்
ADDED : ஆக 03, 2024 12:10 AM
நான்குநேரி:மூலைக்கரைப்பட்டியில் நேற்று கோயிலுக்கு சென்ற போது, தெரு நாய்கள் சுற்றி வளைத்து கடித்ததால் இளம்பெண் படுகாயமடைந்தார்.
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், நேற்று காலை தனது வீட்டின் அருகேயுள்ள கோயிலுக்கு சுவாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த தெரு நாய்கள் அவரை துரத்தியுள்ளது. பதட்டமடைந்து ஓடிய அவரை தெரு நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறின. இதனால் அவர் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தெரு நாய்களை விரட்டி அடித்தனர்.
இளம்பெண்ணின் உடல் முழுவதும் 25 இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக முனைஞ்சிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லுாரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிக்கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டமாக திரியும் தெரு நாய்கள்
மூலைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் நாய்கள் கூட்டமாக திரிவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் தெருவில் விளையாடும் சிறுவர்கள் உள்பட பலரும் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் வலியுறுத்தியுள்ளனர்.