ADDED : ஜூலை 12, 2024 02:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே களக்குடியை சேர்ந்த பால்சாமி மகன் பாலகிருஷ்ணன் (எ) பாலா 30. பாலிடெக்னிக் படிப்பு படித்துள்ளார். அவரது சகோதரிகளுக்கு திருமணம் ஆகி விட்டது. பாலா அரசு பணிகளுக்கு முயற்சித்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக அதற்காக தேர்வு எழுதி வந்தார்.
தீவிர ஆன்மிக ஈடுபாடும் கொண்டவர். இந்நிலையில் அரசு வேலை கிடைக்காத விரக்தியில் நேற்று காலை அங்குள்ள பூலுடையார் சாஸ்தா கோயில் முன் வந்தவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். மானூர் போலீசார் விசாரித்தனர்.