/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
குப்பைக்கு போன பிரதமர் படம் பா.ஜ.,வினர் போராட்டம்
/
குப்பைக்கு போன பிரதமர் படம் பா.ஜ.,வினர் போராட்டம்
குப்பைக்கு போன பிரதமர் படம் பா.ஜ.,வினர் போராட்டம்
குப்பைக்கு போன பிரதமர் படம் பா.ஜ.,வினர் போராட்டம்
ADDED : ஆக 15, 2024 01:16 AM

திருநெல்வேலி:கல்லிடைக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்த பிரதமர் மோடியின் படம் அகற்றப்பட்டு குப்பையில் வீசப்பட்டு கிடந்தது. பா.ஜ.,போராட்டத்தால் மீண்டும் வேறு புதிய படம் பொருத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் படங்கள் நீண்ட நாட்களாக உள்ளன. சுதந்திர தினத்தையொட்டி படங்களை சுத்தப்படுத்தும் போது பிரதமர் மோடி படம் கண்ணாடி உடைந்து விட்டது. எனவே படம் அகற்றப்பட்டு அலுவலகத்துக்கு வெளியே குப்பை போடும் பகுதியில் போடப்பட்டது. இதையறிந்த பா.ஜ., வினர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படத்தை வேண்டுமென்றே அகற்றவில்லை எனவும் கண்ணாடி உடைந்ததால் புதிய கண்ணாடி மாற்றுவதற்கு வைக்கப்பட்டிருந்ததாக சார் பதிவாளர் விசாலாட்சி தெரிவித்தார். எனவே நேற்று மாலை பிரதமர் மோடியின் புதிய படம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டது.