/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தொழிலாளி வீட்டில் 13 பவுன் திருட்டு
/
தொழிலாளி வீட்டில் 13 பவுன் திருட்டு
ADDED : ஜூன் 02, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:வள்ளியூர் அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் 13 பவுன் தங்க நகையை திருடிச்சென்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கோவநேரியை சேர்ந்தவர் செல்லப்பா 67. தொழிலாளி. இவரது மனைவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏர்வாடியில் உள்ள மகள் வீட்டில் தங்கி உள்ளார்.
செல்லப்பாவும் மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். இவர்களது வீடு பூட்டிக் கிடந்ததால் நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகைகள், ரூ.16 ஆயிரத்தை திருடிச்சென்றனர். வள்ளியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.