/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தாமிரபரணி தடாகத்தில் மூழ்கி சகோதரிகள் உட்பட மூவர் பலி
/
தாமிரபரணி தடாகத்தில் மூழ்கி சகோதரிகள் உட்பட மூவர் பலி
தாமிரபரணி தடாகத்தில் மூழ்கி சகோதரிகள் உட்பட மூவர் பலி
தாமிரபரணி தடாகத்தில் மூழ்கி சகோதரிகள் உட்பட மூவர் பலி
ADDED : ஆக 16, 2024 02:00 AM
பாபநாசம்:திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், காரையாறு சொரிமுத்தையனார் கோவில் அருகே தாமிரபரணி ஆறு செல்கிறது. சிவகாசியைச் சேர்ந்தவர்கள் வேனில் சொரிமுத்தையனார் கோவிலுக்கு வந்திருந்தனர்.
கோவில் முன் தாமிரபரணி தடாகத்தில் அவர்கள் குளித்த போது, நீச்சல் தெரியாததால் நான்கு பேர் நீரில் மூழ்கினர். இதில், சிவகாசி, நாராணம்மாள்புரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் மாரீஸ்வரன், 28, என்பவரை அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் காப்பாற்றினர்.
அதே நேரம், சிவகாசி, பள்ளப்பட்டி முருகன் மகள்கள் மேனகா, 18; சோலை ஈஸ்வரி, 15; ஸ்ரீவில்லிபுத்துார் வன்னியம்பட்டி நடராஜன் மகன் சங்கரேஸ்வரன், 40, ஆகியோர் நீரில் மூழ்கி பலியாகினர். அம்பாசமுத்திரம் தீயணைப்பு வீரர்கள் மூவரது உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கல்லிடைக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.