/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஆம்புலன்ஸ் மீது டூவீலர் மோதியதில் இருவர் பலி
/
ஆம்புலன்ஸ் மீது டூவீலர் மோதியதில் இருவர் பலி
ADDED : மே 09, 2024 11:38 PM
திருநெல்வேலி : திருநெல்வேலி வண்ணார்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் ஆம்புலன்ஸ் மீது டூவீலர் மோதிய விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட இருவர் பலியாயினர்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்தவர் செல்வ விநாயகம் 45. தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்.
நேற்று முன்தினம் இரவில் தனது உதவியாளர் மதார் என்பவருடன் ஆம்புலன்சில் திருநெல்வேலி வந்தார். இரவு 11:30 மணியளவில் வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் ரோடு ரயில்வே மேம்பாலத்தின் மீது வந்தபோது எதிரே மேலப்பாளையத்தில் இருந்து டூவீலரில் வேகமாக வந்த ஆனந்த் 19, என்பவர் ஆம்புலன்ஸ் மீது மோதினார். இதில் ஆம்புலன்ஸ் முன் பகுதி சேதமுற்றது.
அதன் டிரைவர் செல்வ விநாயகம் சம்பவ இடத்திலேயே பலியானார். காயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்த் நேற்று பலியானார். போலீசார் விசாரித்தனர்.