/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வைகுண்ட பதியில் அன்னதானம் சமைக்க கெடுபிடி; பாத்திரங்களை அள்ளி சென்றதால் போலீசை கண்டித்து மறியல்
/
வைகுண்ட பதியில் அன்னதானம் சமைக்க கெடுபிடி; பாத்திரங்களை அள்ளி சென்றதால் போலீசை கண்டித்து மறியல்
வைகுண்ட பதியில் அன்னதானம் சமைக்க கெடுபிடி; பாத்திரங்களை அள்ளி சென்றதால் போலீசை கண்டித்து மறியல்
வைகுண்ட பதியில் அன்னதானம் சமைக்க கெடுபிடி; பாத்திரங்களை அள்ளி சென்றதால் போலீசை கண்டித்து மறியல்
ADDED : மார் 04, 2025 11:58 PM

திருநெல்வேலி; திருநெல்வேலி, வைகுண்டபதியில் அன்னதானம் சமைக்க வைத்திருந்த பாத்திரங்களை போலீசார் கெடுபிடியாக எடுத்துச் சென்றதோடு, பக்தர்களை தாக்கியதால், அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்திற்கு பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
திருநெல்வேலி, கோட்டூர் சாலையில் அய்யா வைகுண்டர் பதி எனும் தனியார் கோவில் உள்ளது. நேற்று அய்யா அவதார தினத்தையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க உணவு சமைக்கும் பணி நடந்தது.
அந்த கோவிலில் இரு தரப்பினர் வழிபாடு மேற்கொள்கின்றனர். அதில், ஒரு தரப்பினர் கோவில் வளாகத்தில் சமையல் செய்ய, இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, போலீசில் புகார் செய்தனர்.
ஏற்கனவே இது தொடர்பாக ஆர்.டி.ஓ., முன் விசாரணை நடந்துள்ளது. இதில், அங்கு யாரும் சமையல் செய்யக்கூடாது எனவும், இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பரிகாரம் தேடிக் கொள்ளும்படியும் ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வைகுண்ட பதியில், அவதார தினத்தையொட்டி சமையல் செய்யும் பணி துவங்கியதால், போலீசார் அங்கு சென்று பாத்திரங்களை அப்புறப்படுத்தினர். அங்கிருந்த பக்தர்களை தாக்கினர். இதில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், சிலர் காயமுற்றனர்.
போலீசாரின் கெடுபிடியை கண்டித்து, பக்தர்கள் மார்க்கெட் பகுதியில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில், 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர், அமைதிப் பேச்சு நடந்தது. பிற்பகலில் கோவிலில் அன்னதானம் நடந்தது.
இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து சென்னை டி.ஜி.பி., அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அய்யா வைகுண்டர் தர்மபதி கோவிலில், சமையல் செய்வது தொடர்பாக, இரு பிரிவினருக்கு இடையே பிரச்னை உள்ளது. நீதிமன்றத்தில் பரிகாரம் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு, பிப்., 21ல், இரு தரப்பினருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை இரு தரப்பனரும் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
நேற்று பிரச்னை உள்ள இடத்தில், நீதிமன்றத்தை அணுகாமல், ஒரு தரப்பினர் முன்னறிவிப்பின்றி அடுப்பை பற்ற வைக்க முயற்சித்தனர். இதற்கு எதிர் தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்தனர். பாளையங்கோட்டை போலீசார் தடுத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் சிவில் நீதிமன்றத்தில் நிவாரணம் தேட அறிவுறுத்தினர்.
திருநெல்வேலி காவல் துறை நடவடிக்கையை, கண்ணியமாகவும், நடுநிலையுடனும் கையாண்டுள்ளனர். இரு தரப்பினரும் அமைதியான முறையில், வழிபாட்டை தொடர்கின்றனர். சமூக வலைதளங்களில், காவல் துறையினர் அராஜகம் என்றும், அன்னதானம் நிறுத்தப்பட்டது போலவும், தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. இது உண்மைக்குப் புறம்பானது.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
அய்யா வைகுண்டரின் அவதார விழாவுக்கு, தி.மு.க., அரசு பல்வேறு கெடுபிடிகள் விதித்திருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆன்மிக பூமியான தமிழகத்தில், தொடர்ந்து பக்தர்களுக்கு இடையூறு செய்வதை, அரசு வழக்கமாகக் கொண்டிருக்கிறது. போலி மதச்சார்பின்மை பேசி, தமிழகத்தின் ஆன்மிக நம்பிக்கைகளை, இதுபோன்ற அடாவடித்தனமான நடவடிக்கைகளால் சிதைத்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அய்யா வைகுண்டரின் அவதார தினத்தில், பக்தர்கள் மனதை புண்படுத்தியதற்கு, முதல்வர் மன்னிப்பு கேட்பதோடு, இந்த முறைகேடான நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் மீதும், அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அண்ணாமலை,
தமிழக பா.ஜ., தலைவர்
அய்யா வைகுண்டரின் அவதார தினமான நேற்று, அய்யா வழி மக்களின் மனதை புண்படுத்தும் வகையில், தி.மு.க., அரசு செயல்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர், அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவானவர். ஜாதி, ஏற்றத்தாழ்வுகளை சரி செய்தவர். அப்படிப்பட்ட மகானின் அவதார தினத்தன்று, அவர்களது பக்தர்களிடம், காவல் துறை அடக்குமுறையை கையாண்டதை, எந்த வகையிலும் ஏற்க முடியாது. அய்யாவின் அன்பு வழி மக்கள் மீது, அடக்குமுறை செய்யும் வகையில், செயல்பட்டு பக்தர்களுக்கு, பாதகம் செய்யும் வகையில், தமிழக அரசு இனிமேல் செயல்படக்கூடாது.
- - முத்துரமேஷ், தமிழக நாடார் சங்க தலைவர்