/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
யாரை ஏமாற்ற பழநியில் மாநாடு பா.ஜ., ராஜா குற்றச்சாட்டு
/
யாரை ஏமாற்ற பழநியில் மாநாடு பா.ஜ., ராஜா குற்றச்சாட்டு
யாரை ஏமாற்ற பழநியில் மாநாடு பா.ஜ., ராஜா குற்றச்சாட்டு
யாரை ஏமாற்ற பழநியில் மாநாடு பா.ஜ., ராஜா குற்றச்சாட்டு
ADDED : ஆக 26, 2024 04:47 AM

திருநெல்வேலி: ''ஹிந்து விரோதியான தி.மு.க., பழநியில் யாரை ஏமாற்ற முருகன் மாநாடு நடத்தியது என தெரியவில்லை''என்று பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார்.
திருநெல்வேலியில் அவர் கூறியதாவது:
தி.மு.க., ஹிந்து மதத்திற்கு விரோதி. ஹிந்துக்களின் பல்வேறு பிரச்னைகளில் தலையிடுகின்றனர். ஹிந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாயை எடுத்து பழநியில் முருகன் மாநாடு என்ற போர்வையில் செலவு செய்கிறார்கள். யாரை ஏமாற்றுவதற்காக மாநாடு என்பது தெரியவில்லை. அது ஆன்மிக மாநாடு இல்லை. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்துக்கு மத்திய அரசு நிதியை அதிகமாக வழங்கி வருகிறது. உலகத்திலேயே இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது என்றார்.