/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
குவாரி இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி
/
குவாரி இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி
ADDED : மார் 15, 2025 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த ஜான்சன் மகன் சாமுவேல் 25. திருநெல்வேலி மாவட்டம் காவல்கிண்று மங்கம்மாள் சாலையில் அரவிந்தன் நடத்தி வரும் எம்.சாண்ட் குவாரியில் ஆப்பரேட்டராக வேலை பார்த்தார்.
கல் அரைக்கும் இயந்திரத்தில் சாமுவேல், கற்களை தள்ளி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பெல்ட்டில் கை சிக்கியது. இதனால் அவர் இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டு சிக்கி பலியானார். பணகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.