/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பங்க் மேலாளரிடம் ரூ.33 லட்சம் கொள்ளை பெண் உட்பட 10 பேர் கைது
/
பங்க் மேலாளரிடம் ரூ.33 லட்சம் கொள்ளை பெண் உட்பட 10 பேர் கைது
பங்க் மேலாளரிடம் ரூ.33 லட்சம் கொள்ளை பெண் உட்பட 10 பேர் கைது
பங்க் மேலாளரிடம் ரூ.33 லட்சம் கொள்ளை பெண் உட்பட 10 பேர் கைது
ADDED : மே 10, 2025 02:41 AM

திருநெல்வேலி:பெட்ரோல் பங்க் மேலாளரிடம் ரூ.33 லட்சம் பணம் கொள்ளையடித்த சம்பவத்தில் நாங்குநேரி, மதுரை, சாயல்குடியை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி, இஸ்ரோ விண்வெளி மையம் அருகே மாவட்ட தி.மு.க., அவை தலைவர் கிரஹாம்பெல் குடும்பத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. மே 5ல் பங்க் மேலாளர் முருகன், ரூ.36 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயை வங்கியில் செலுத்துவதற்காக டூவீலரில் கொண்டு சென்றார். டூவீலரில் வந்த மூன்று வாலிபர்கள் அவர் மீது மோதுவது போல் சென்று கீழே தள்ளிவிட்டு அவரது பணப் பையை பறித்து சென்றனர். இதில் சம்பவ இடத்திலேயே ரூ.3 லட்சம் மற்றும் ஒரு அலைபேசியை தவறவிட்டனர்.
நான்கு தனிப்படையினர் இது குறித்து விசாரித்தனர். அந்த அலைபேசி நாங்குநேரி பகுதியை சேர்ந்த கல்யாணிக்கு 19, சொந்தமானது என தெரியவந்தது. ஒருவர் மதுரையையும் மற்றொருவர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியையும் சேர்ந்தவர் என உறுதியானது.
தனிப்படையினர் மதுரை மற்றும் சாயல்குடியில் முகாமிட்டு ஒரு பெண் உள்பட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் துரத்தி சென்ற போது தப்பி ஓட முயன்ற சிலர் காயமுற்றனர்.
இருப்பினும் கைது செய்யப்பட்டவர்கள் பெயர், போட்டோக்களை போலீஸ் வெளியிடவில்லை.