/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லையில் நாய்க்கடி 10 பேருக்கு சிகிச்சை
/
நெல்லையில் நாய்க்கடி 10 பேருக்கு சிகிச்சை
ADDED : ஏப் 04, 2025 02:35 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சி, புதுத்தெருவைச் சேர்ந்த 3 வயதான மனோஜ், 2 வயதான சண்முகவேல், பள்ளி சிறுமி உள்ளிட்டோரை தெருநாய்கள் கடித்தன. வீட்டு முன் திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த முதியோர்களையும் தெருநாய்கள் கடித்தன.
ஒரே நாளில் நாய்கள் கடித்து, 10க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். தெருக்களில் திரியும் நாய்களை உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே போல, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பட்டிக்குக்குள் புகுந்து வெறிநாய்கள் கடித்ததில், 18 ஆடுகள் பலியாகின.

