/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பஸ் நிழற்குடையில் உட்கார ரூ.10 வசூல் செய்யும் தனியார்
/
பஸ் நிழற்குடையில் உட்கார ரூ.10 வசூல் செய்யும் தனியார்
பஸ் நிழற்குடையில் உட்கார ரூ.10 வசூல் செய்யும் தனியார்
பஸ் நிழற்குடையில் உட்கார ரூ.10 வசூல் செய்யும் தனியார்
UPDATED : பிப் 20, 2025 07:12 AM
ADDED : பிப் 20, 2025 01:48 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் பஸ்சுக்கு காத்திருப்பவர்கள் உட்காருவதற்கு பிளாஸ்டிக் நாற்காலி போட்டு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் வடக்கு பைபாஸ் மதுரை, சங்கரன்கோவில் உள்ளிட்ட வெளியூர் பஸ்கள் நின்று செல்லும் பகுதியாகும். எப்போதும் கூட்டம் இருக்கும் அந்த பகுதியில் ஒரே ஒரு பயணிகள் நிழற்குடை உள்ளது. பஸ்சுக்கு காத்திருப்பவர்கள் உட்காருவதற்காக அங்குள்ள இருசக்கர வாகன காப்பகம் நடத்துபவர்கள் நிறுவனத்தின் வாசலில் நான்கைந்து பிளாஸ்டிக் சேர்களை போட்டு அதில் உட்காருவதற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கின்றனர்.
பஸ்சுக்கு காத்திருப்பவர்களிடம் கட்டணம் வசூலிப்பது மனிதாபிமானமற்ற செயல் என சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பயணிகள் நிழல் குடை, இருக்கை வசதியை மாநகராட்சி செய்து தர வேண்டும்.

