/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பெண்ணிடம் 13 பவுன் நகை பறிப்பு
/
பெண்ணிடம் 13 பவுன் நகை பறிப்பு
ADDED : ஜூலை 21, 2025 01:56 AM

திருநெல்வேலி,: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே பெருங்குடியை சேர்ந்தவர் வினோத் 34. இவர் மதுரையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி 30. ஒரு குழந்தை உள்ளது.
கிருஷ்ணவேணி, வள்ளியூர் அருகே ஊத்தடியில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு நடந்த கோயில் கொடை விழாவில் பங்கேற்றார். இரவில் உறவினர் வீட்டின் முதல் மாடியில் துாங்கிக் கொண்டிருந்தார். காற்றுக்காக கதவு திறந்து வைக்கப்பட்டிருந்தது.
அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர் கிருஷ்ணவேணி அணிந்திருந்த 15 பவுன் நகையை பறித்தார். பதட்டத்தில் எழுந்த அவர் சத்தம் போட்டு கூச்சலிட்டார். எனினும் அந்த நபர் 13 பவுன் நகையுடன் தப்பினார். 2 பவுன் மட்டும் கிருஷ்ணவேணியிடம் இருந்தது. வள்ளியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.