/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
காட்டாற்று வெள்ளத்தில் தவித்த 15 பேர் மீட்பு
/
காட்டாற்று வெள்ளத்தில் தவித்த 15 பேர் மீட்பு
ADDED : அக் 12, 2025 11:17 PM

திருக்குறுங்குடி; காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, தவித்த சுற்றுலா பயணியர், 15 பேர் தீயணைப்பு துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி, ஏர்வாடி, வள்ளியூரை சேர்ந்த, 15 பேர் கொண்ட சுற்றுலா பயணியர் நேற்று மதியம், நம்பிமலைக்கோவில் நம்பியாற்றில் குளிக்க சென்றனர். திருக்குறுங்குடி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் திடீரென நேற்று மாலை காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
நம்பி கோவிலிலிருந்து வெளியே வரும் வழியில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதில், சுற்றுலா பயணியர் தவித்தனர். இது குறித்து, தீயணைப்பு துறையினருக்கு, வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு படையினர் கயிறு கட்டி, வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பயணியரை பாதுகாப்பாக மீட்டனர். இது தொடர்பாக திருநெல்வேலி போலீசார் விசாரிக்கின்றனர்.