/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வாலிபர் வெட்டி கொலை மாணவர்கள் 2 பேர் கைது
/
வாலிபர் வெட்டி கொலை மாணவர்கள் 2 பேர் கைது
ADDED : செப் 07, 2025 01:47 AM

திருநெல்வேலி:திருநெல்வேலியில், வாலிபரை வெட்டி கொலை செய்த, பிளஸ் 2 மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி டவுன் சுந்தரர் தெருவைச் சேர்ந்த பார்த்திபன் மகன் வெங்கடேஷ், 19. இவரது பெற்றோர் இறந்து விட்டனர். பெரியப்பா வீட்டில் தங் கி, குடிநீர் சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு நண்பர்கள் இருவருடன் திருநெல்வேலி ஜங்ஷன், ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம் உள்ள டீக்கடைக்கு வந்தார்.
அவரை பின்தொடர்ந்து அங்கு வந்த மூன்று பேர், வெங்கடேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
போலீஸ் கமிஷனர் சந்தோஷ் உத்தரவில், திருநெல்வேலி டவுன் தனி யார் பள்ளியில், படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் இருவரை போலீசார் நேற்று கைது செய்த னர்.
விசாரணையில், திருநெல்வேலி டவுனில், 2023ல் சக்தி என்பவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு, பழிக்குப்பழியாக வெங்கடேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இதில், முக்கிய குற்றவாளியான இசக்கி ராஜா, 19, என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.