தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/27 நட்சத்திரங்களுக்குரிய பரிகார மரங்களை வளர்த்து வரும் குற்றாலம் கோயில் நிர்வாகத்தினர்

27 நட்சத்திரங்களுக்குரிய பரிகார மரங்களை வளர்த்து வரும் குற்றாலம் கோயில் நிர்வாகத்தினர்

27 நட்சத்திரங்களுக்குரிய பரிகார மரங்களை வளர்த்து வரும் குற்றாலம் கோயில் நிர்வாகத்தினர்


ADDED : ஜன 01, 2012 02:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2012 02:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒருவர் பிறந்த நாள் தேதி, நேரம், விநாடி அடிப்படையிலும், பஞ்சாங்க அடிப்படையிலும் ஜாதகம் உருவாக்கப்படுகிறது. 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் அதற்குரிய எண், நிறம், கல், அதிதேவதை, பரிகார மரம் என அனைத்து விபரங்களும் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

தெய்வ மணம் கமழும் செய்யுள் இயற்றிய சேக்கிழார் பெருமான் போற்றிய புண்ணிய நாடாகிய பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவஸ்தலங்களில் மிக தொன்மையானதும், தலம், தீர்த்தம், மூர்த்தி மூன்றினாலும் சிறப்பு பெற்றது குற்றாலம்.பிறவிப்பணியால் வாடும் எண்ணற்ற மக்களின் பாவங்களை நீக்கி மானுட பிறவியின் பயனை உணர்த்தும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலா வருபவர்களும், நோயினை போக்க வருபவர்களும் அருவிகளில் குளித்து, குற்றாலநாதர் - குழல்வாய்மொழியம்மையை தரிசித்து, கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பரிகார மரங்களை வணங்கி செல்வர். 12 ராசிக்காரர்களுக்குரிய 27 நட்சத்திரத்திற்குரிய மரங்களை குற்றாலநாதர் கோயில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.நட்சத்திரத்திற்குரிய மரங்கள்அஸ்வதி - எட்டிமரம், பரணி-நெல்லி, கார்த்திகை - அத்தி, ரோகிணி - நவ்வல், மிருகசீர்ஷம் - கருங்காலி, திருவாதிரை - செங்கருங்காலி, புனர்பூசம் - மூங்கில், பூசம் - அரசு, ஆயில்யம் - புன்னை, மகம் - ஆல், பூரம்- பலாசம், உத்திரம் - அலரி, ஹஸ்தம் - அத்தி, சித்திரை - வில்வம், ஸ்வாதி - மருது, விசாகம் - விளா, அனுஷம் - மகிழ், கேட்டை - பிராய், மூலம் - மரா, பூராடம் - வஞ்சி, உத்திராடம் - பிலா, திருவோணம் - எருக்கு, அவிட்டம் - வன்னி, சத்யம் - கடம்பு, பூரட்டாதி - தேவா, உத்திரட்டாதி - வேம்பு, ரேவதி- இலுப்பை என 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்கள் குற்றாலம் கோயில் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.எந்த ஒரு புண்ணிய ஸ்தலமானாலும் அங்கு உறையும் இறைவனை வழிபட விரும்புபவர்கள் மூன்று தினங்களாவது அத்தலத்தில் தங்கி வழிபட வேண்டும் என்பது முன்னோர் வாக்கு. இது ஒருபுறமிருக்க இறை வழிபாடு மட்டுமின்றி பிற பல காரணங்களினாலும் குற்றாலம் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. இங்குள்ள இயற்கை காட்சிகள், ஆரோக்ய தலமாக்கும் அருவிகள், இன்பம் தரும் தென்றல் காற்று, சந்தனம் மணக்கும் சாரல் மழை, பிறவிப்பயன், பிணி நீங்க பிரார்த்திப்பவர்களின் பிணி தீர்த்து உடல் புத்துணர்ச்சி பெறவும், மனம் தெளிவு பெறவும் எத்தனை நாள் இத்தலத்தில் தங்கினாலும் சலிப்பை தராமல் வசீகரப்படுத்தும் தன்மை உடையது.இப்படி உடல் நலம், மனநலம் ஒருசேர வேறு எங்கும் பெற முடியுமா? எனவே குற்றாலம் வந்து பிணியையும், தோஷங்களையும் அகற்ற குற்றாலத்தில் குளித்து பரிகார மரங்களை வணங்கி நோய் நொடியின்றி ஆயுள் பெறுவோம்!

பக்தர்கள் கோரிக்கை

குற்றாலம் வருபவர்கள் அருவிகளில் குளித்து பரிகார மரங்களை வணங்கி வந்தனர். தற்போது பரிகார மரங்களை சுற்றி காம்பவுண்ட் கேட் போட்டு பூட்டப்பட்டிருப்பதாலும், மரங்களில் உரிய பெயர் பலகை பொருத்தப்படாததாலும் தோஷம், பரிகாரம் போன்றவற்றை மேற்கொள்ள முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மரங்களை பராமரித்து பாதுகாத்து வரும் கோயில் நிர்வாகம் பக்தர்களின் நலன் கருதி காம்பவுண்ட் கேட் திறந்திடவும், மரங்களில் பெயர் பலகை பொருத்திடவும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் முன்வர வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் குற்றாலநாதர் கோயில் வரலாறு புத்தகம் கடந்த 2000ம் ஆண்டில் மறுபதிப்பு செய்யப்பட்டது. அதன்பிறகு இதுவரை மறுபதிப்பு செய்யப்படாததால் புத்தகங்கள் கிடைக்காமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கோயில் தல வரலாறு புத்தகம் மறுபதிப்பு செய்யும் போது 12 ராசிகள், 27 நட்சத்திரத்திற்குரிய பரிகார மரங்களின் விபரங்களையும் இணைத்து வெளியிட வேண்டுமென்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கே. செல்லப்பெருமாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us