/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மீன்பிடி தகராறில் வாலிபர் கொலையில் 3 பேர் கைது
/
மீன்பிடி தகராறில் வாலிபர் கொலையில் 3 பேர் கைது
ADDED : ஏப் 24, 2025 03:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:தென்காசி மாவட்டம் கடையம், பாப்பான்குளம் அருகே செல்லப்பிள்ளையார்குளத்தை சேர்ந்த குமாரசாமி மகன் மாதவன் 24. கூலித் தொழிலாளி.
இவர் சில தினங்களுக்கு முன் சிவஞானபுரத்தில் உள்ள குளத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது சிவஞானபுரத்தைச் சேர்ந்த தங்க நாராயணன், அருள், பாலமுருகன் ஆகியோர் 'இங்கு வந்து எப்படி மீன் பிடிக்கலாம்'என்று கேட்டு தகராறு செய்து தாக்கினர்.
இதில் பலத்த காயமுற்ற மாதவன், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இதில் மூவரையும் ஆழ்வார்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

