/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வாலிபர் வெட்டிக்கொலை சிறார் உட்பட 3 பேர் கைது
/
வாலிபர் வெட்டிக்கொலை சிறார் உட்பட 3 பேர் கைது
ADDED : ஜன 19, 2025 02:34 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே வடக்கு புளியம்பட்டியை சேர்ந்தவர் சேதுபதி 30. கேரளாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் வந்திருந்தார்.
நேற்று முன்தினம் மாலை 2 டூவீலர்களில் வந்த மூன்று பேர் சேதுபதியை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர். அதே பகுதியைச் சேர்ந்த பெனிஷ் குமார் 25, வினித் 23, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.
ஒரு ஆண்டுக்கு முன் வன்னிக்கோனேந்தலில் உள்ள பெட்ரோல் பங்கில் பெனிஷ்குமார் வேலை பார்த்தார்.
அங்கு பெட்ரோல் போட வந்த சேதுபதி, பெனிஷ்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இந்த முன் விரோதத்தை மனதில் கொண்டு அவரை தேடி வந்தனர். சேதுபதி கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருப்பதாக வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். இதை பார்த்த பெனிஷ்குமார் தரப்பினர் இரண்டு நாட்களாக சேதுபதியை பின் தொடர்ந்து சென்று வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

