/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மானுார் கிரேன் ஆப்பரேட்டர் கொலையில் 4 பேர் கைது
/
மானுார் கிரேன் ஆப்பரேட்டர் கொலையில் 4 பேர் கைது
ADDED : அக் 06, 2024 01:52 AM
திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் மானுார் அருகே கிரேன் ஆப்பரேட்டர் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே ரெட்டியார்பட்டி வெங்கடேஸ்வராபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அகிலாண்டேஸ்வரன் 27. சொந்தமாக கிரேன் வைத்துள்ளார். திருமணமாகவில்லை. நேற்று முன்தினம் இரவு அழகியபாண்டியபுரத்தில் இருந்து ஊத்துமலைக்கு டூவீலரில் சென்றார். உக்கிரன்கோட்டை கூட்டுறவு வங்கி அருகே 4 பேர் கும்பல் அவரை வெட்டி கொலை செய்தது. மானுார் போலீசார் விசாரித்தனர்.
போலீசார் கூறியதாவது: அகிலாண்டேஸ்வரன் அப்பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் அடிக்கடி அலைபேசியில் பேசியுள்ளார். ஆத்திரமற்ற பெண்ணின் கணவர் அசோக் ரத்தினராஜ் 35, அவரை கண்டித்துள்ளார். அகிலாண்டேஸ்வரன் அப்பெண்ணுடன் பேசுவதை நிறுத்தவில்லை. இந்த தகராறில் அகிலாண்டேஸ்வரன் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அசோக்ரத்னராஜ், அவரது கூட்டாளிகள் இமானுவேல் ராஜா 27, பாரதி 27, பொன்ராஜ் 27, ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்றனர்.