/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மதுரை கான்ட்ராக்டரிடம் ரூ.1 லட்சம் பறிப்பு திருநெல்வேலியில் 5 பேர் கைது

ADDED : டிச 02, 2024 04:20 AM
திருநெல்வேலி: திருநெல்வேலியில் அலைபேசி செயலி மூலம் ஓரினச்சேர்க்கைக்கு ஆசை காட்டி அழைத்து மதுரை கான்ட்ராக்டரிடம் ரூ.1 லட்சம் பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை அனுப்பானடி நேரு 59; கான்ட்ராக்டர். திருநெல்வேலி ஜங்ஷன் லாட்ஜில் தங்கியிருந்தார். 'கிரிண்டர் ஆப்' எனப்படும் அலைபேசி செயலி மூலமாக அவரை சிலர் தொடர்பு கொண்டனர். ஓரினச் சேர்க்கை ஆசை காட்டி வண்ணார்பேட்டைக்கு அழைத்தனர். அங்கு சென்ற நிலையில், அசோக் என்பரது வீட்டில் நேருவை அடைத்து வைத்து மிரட்டி ரூ.1 லட்சத்தை பறித்தனர். தப்பி வந்த நேரு, போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக வண்ணார்பேட்டை சின்னதுரை 20, கிருஷ்ணா 24, பாஸ்கர் 20, ராம்சந்துரு 20, அசோக் 22, ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டனர்.
இவர்கள் மேலும் சிலரை இவ்வாறு மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்தது.