/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பி.எஸ்.எப்., அதிகாரி வீட்டில் துப்பாக்கி திருடிய 6 பேர் கைது
/
பி.எஸ்.எப்., அதிகாரி வீட்டில் துப்பாக்கி திருடிய 6 பேர் கைது
பி.எஸ்.எப்., அதிகாரி வீட்டில் துப்பாக்கி திருடிய 6 பேர் கைது
பி.எஸ்.எப்., அதிகாரி வீட்டில் துப்பாக்கி திருடிய 6 பேர் கைது
ADDED : டிச 20, 2024 01:57 AM
திருநெல்வேலி:பஞ்சாப் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் வைத்திருந்த துப்பாக்கி, தோட்டாக்களை திருடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலிமாவட்டம் ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரத்தை சேர்ந்தவர் அழகுமுத்து 42. பஞ்சாபில் எல்லை பாதுகாப்பு படையில் அதிகாரியாக பணிபுரிகிறார். கடந்த மாதம் சமூகரெங்கபுரத்திற்கு வந்திருந்தார்.
அப்போது வீட்டில் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்து இருந்தார்.அவரது பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரம் மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை திருடிச் சென்றனர். ராதாபுரம் போலீசார் விசாரித்தனர்.
6 பேர் கைது
இதுதொடர்பாக மதுரை மாவட்டம் திருமங்கலம் சிவரக்கோட்டையை சேர்ந்த ராகவன் 23, குமார் 24, முத்து முருகன் 25, சிவகாசியை சேர்ந்த முத்து 23, ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த முத்துராஜா 30, திருத்தங்கல் அமாவாசை 25, ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குடை, காஸ் ஸ்டவ் பழுது நீக்கி தருவதாகக்கூறி முதியோர் இருக்கும் வீடுகளை குறிவைத்து இவர்கள் திருட்டில் ஈடுபடுவது தெரியவந்தது.