/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மின் வயரை மிதித்த 6 வயது சிறுவன் பலி
/
மின் வயரை மிதித்த 6 வயது சிறுவன் பலி
ADDED : ஏப் 08, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : அறுந்து கிடந்த மின் வயரை தெரியாமல் மிதித்த 6 வயது சிறுவன் பலியானார்.
திருநெல்வேலி சீதபற்பநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்து. ஆட்டோ டிரைவர். இவரது மகன் மாதேஷ் 6. அங்கன்வாடியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் மழையுடன் பலத்த காற்று வீசியது. இதில் மரங்கள் சாய்ந்தன. மின் வயர்கள் அறுந்துசாலையில் விழுந்து கிடந்தன. நேற்று காலை அவ்வழியே சென்ற மாதேஷ் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததில் தூக்கி வீசப்பட்டு இறந்தார்.

