/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
6 ஆண்டில் 633 பேருக்கு நெல்லையில் வன்கொடுமை
/
6 ஆண்டில் 633 பேருக்கு நெல்லையில் வன்கொடுமை
ADDED : ஆக 16, 2025 02:22 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத் தில் ஆறு ஆண்டுகளில் 633 வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளது.
இம்மாவட்டத்தில் 2019 முதல் 2025 ஏப்ரல் வரை வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழக்கறிஞர் இசக்கிபாண்டியன், போலீஸ் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறையினருக்கு தனித்தனியாக மனு அனுப்பினார்.
போலீஸ் தரப்பில் திருநெல்வேலி புறநகர் மாவட்டத்தில் 2019 முதல் 2025 வரை 446 பேர், நகரில் 187 பேர் என, மொத்தம் 633 பேர் பாதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆதி திராவிடர் நலத்துறையின் தகவல் அலுவலர் அமுதா தந்த விபரத்தில் 2021 - 2022ல், 302 பேர், 2022 - 2023ல், 296 பேர், 2023 - 2024ல் 287 பேர், 2024 - 2025ல் 210 பேர் என நான்கு ஆண்டுகளில், 1,095 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு நான்கு ஆண்டுகளில், 11 கோடியே, 28 லட்சம் ரூபாய் அரசு நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரே கேள்விக்கு, போலீஸ், ஆதி திராவிடர் நலத்துறை இருவேறு தகவல்களை வழங்கியுள்ளனர். இதில், போலீசார் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை குறைத்து வழங்கி இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.