/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பழிக்கு பழியாக வாலிபர் கொலை 8 பேருக்கு இரட்டை ஆயுள்
/
பழிக்கு பழியாக வாலிபர் கொலை 8 பேருக்கு இரட்டை ஆயுள்
பழிக்கு பழியாக வாலிபர் கொலை 8 பேருக்கு இரட்டை ஆயுள்
பழிக்கு பழியாக வாலிபர் கொலை 8 பேருக்கு இரட்டை ஆயுள்
ADDED : ஜன 21, 2025 05:08 AM

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் பழிக்கு பழியாக நடந்த வாலிபர் கொலையில் தந்தை,மகன் உட்பட 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
வீரவநல்லூர் கோட்டைவாசல் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் சுரேஷ் 27. அவர் வீட்டில் இருந்தபோது 2014 செப்டம்பர் 29 காலையில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தனர்.
2011ல் அம்பாசமுத்திரம் அருகே நடந்த கொலை, 2013ல் வீரவநல்லூரில் வெள்ளபாண்டி கொலை ஆகிய சம்பவங்களில் சுரேஷ் கைதானார்.
அவரை பழிக்கு பழியாக வெள்ளபாண்டி உறவினர்கள் கொலை செய்ததாக 15 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். திருநெல்வேலி முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த வழக்கில் வீரவநல்லூர் நயினார் காலனியை சேர்ந்த வழக்கறிஞர் செந்தில்குமார் 39, அவரது தந்தை சந்திரன் 65, உறவினர்கள் அ.தி.மு.க., பிரமுகர் முருகேசன் 45, மதியழகன் 45, நம்பிராஜன் 32, பிச்சுமணி 41 ஸ்ரீகாந்த் 37 விஜய் 29 ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பத்மநாபன் நேற்று தீர்ப்பளித்தார்.

