/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கொள்ளையில் 70 வயது நபர் கைவரிசை
/
கொள்ளையில் 70 வயது நபர் கைவரிசை
ADDED : நவ 07, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிக்கண்ணு. நகைக்கடை நடத்துகிறார். அருகிலேயே நகைகள் தயாரிக்கும் பட்டறையும் வைத்து உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது கடைக் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இரும்பு பீரோவை உடைக்க முயற்சித்து முடியாததால், அதில் இருந்த நகைகள், பணம் தப்பியது. அருகில் வெளியே வைத்திருந்த 10 கிராம் தங்கம், 10,000 ரூபாய் திருடு போயிருந்தது.
கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளின் படி, 70 வயது மதிக்கத்தக்க முதியவர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.