/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திருச்செந்தூர் கோயிலில் தரிசனத்திற்கு வரிசையில் நின்றவரை கடித்த நாய்; மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பரிதாபம்

UPDATED : நவ 10, 2025 09:19 AM
ADDED : நவ 10, 2025 01:17 AM

திருநெல்வேலி: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் விஸ்வரூப தரிசனத்திற்காக அதிகாலை வரிசையில் காத்திருந்த முதியவரை நாய் கடித்தது பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் அவர் தரிசனம் செய்யாமல் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே டாணாவைச் சேர்ந்த முதியவர் முத்துராமன் 66. இவர் மைத்துனர் இசக்கியப்பனுடன் 63, நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றார். இருவரும் கடற்கரையில் தங்கியிருந்து அதிகாலை 3:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் செய்ய ரூ.100 டிக்கெட் வாங்கி கோயிலுக்குள் சென்றனர்.
முருகனை அருகில் நின்று தரிசிக்க வரிசையில் சென்ற போது கோயில் வளாகத்தில் திரிந்த நாய் ஒன்று திடீரென முத்துராமனின் காலில் கடித்தது. இதனால் தரையில்விழுந்து வலியுடன்அவர் கத்தினார். அருகிலிருந்த பக்தர்கள் நாயை விரட்டினர். முத்துராமனின் காலில் இரத்தம் வழிந்த நிலையில் அவர் பாதுகாப்பு பணியாளரிடம் தெரிவித்தார்.
பின் கோயில் வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அவர் சென்றார். அங்கு மருத்துவ பணியாளர்கள் இல்லாததால் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு மருத்துவ மனைக்கு சென்றார். அங்கு முத்துராமனுக்கு முதலுதவி செய்து நாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டது. ரத்தம் நிற்காததால் அவர் தன் சொந்த ஊரான பாபநாசம் விக்கிரமசிங்கபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதியானார்.
இச்சம்பவம் பக்தர்களி டையே அதிர்ச்சி, வேதனையை ஏற்படுத்தியுள்ளது.