/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பழுதான விளையாட்டு சறுக்கு சிறுமியின் கால்விரல் துண்டானது
/
பழுதான விளையாட்டு சறுக்கு சிறுமியின் கால்விரல் துண்டானது
பழுதான விளையாட்டு சறுக்கு சிறுமியின் கால்விரல் துண்டானது
பழுதான விளையாட்டு சறுக்கு சிறுமியின் கால்விரல் துண்டானது
ADDED : ஜன 31, 2025 01:57 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சி பூங்கா விளையாட்டு சறுக்கில் விளையாடிய சிறுமியின் இடது கால் சுண்டு விரல் துண்டானது.
திருநெல்வேலி கொக்கிரகுளத்தைசேர்ந்தவர் ஆண்டியப்பன் . இவரது இளைய மகள் அனுஸ்ரீ 7; அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகிறார். தினமும் மாலையில் பள்ளி முடிந்ததும் பாளை.,வ. உ. சி., மைதானத்தில் உள்ள விளையாட்டு பூங்காவில் குழந்தைகளை விளையாட ஆண்டியப்பன் அழைத்துச் செல்வார். நேற்று முன்தினம் மாலையில் சறுக்கில் விளையாடிக் கொண்டிருந்தபோது பழுதான சறுக்கில் உடைந்த
துவாரத்தில் சிறுமியின் இடது கால் சுண்டு விரல் சிக்கி துண்டானது. ரத்தம் வெளியேறிய நிலையில் ஆண்டியப்பன் சிறுமியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். விரலை மீண்டும் ஒட்ட வைக்க முடியாத நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாநகராட்சி மீது புகார்
இம்மாநகராட்சி பூங்காக்களில் விளையாட்டு சாதனங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் அனு ஸ்ரீயை போல பலரும் காயமடைந்துள்ளனர். நேற்று சம்பவத்திற்கு பிறகு அந்த விளையாட்டு சறுக்கை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்தினர். மேயர் ராமகிருஷ்ணன் சிறுமியை சந்தித்து ஆறுதல் கூறி, தேவையான சிகிச்சையளிக்கப்படும் என பெற்றோரிடம் உறுதி அளித்துள்ளார்.

