sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 பெட்ரோல் குண்டு வீசி அரிவாளால் வெட்டிய கும்பல்: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மறியல்

/

 பெட்ரோல் குண்டு வீசி அரிவாளால் வெட்டிய கும்பல்: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மறியல்

 பெட்ரோல் குண்டு வீசி அரிவாளால் வெட்டிய கும்பல்: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மறியல்

 பெட்ரோல் குண்டு வீசி அரிவாளால் வெட்டிய கும்பல்: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மறியல்


UPDATED : மார் 03, 2026 09:06 AM

ADDED : மார் 03, 2026 03:12 AM

Google News

UPDATED : மார் 03, 2026 09:06 AM ADDED : மார் 03, 2026 03:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே டூவீலர்களில் அரிவாள்களுடன் வந்த கும்பல் வெட்டியதில் 2 பேர் பலியாயினர். மேலும் சிலர் காயமடைந்தனர். பெரும்பத்து மக்கள் இதை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.

களக்காடு செல்லும் சாலையில் பெரும்பத்து கிராமத்தில் நேற்று இரவு டீக்கடை முன் அமர்ந்து சிலர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 3 டூவீலர்களில் அரிவாள்களுடன் வந்த 9 பேர் திடீரென அங்கு இருந்தவர்களை சரமாரியாக வெட்டியதுடன், பெட்ரோல் குண்டுகளையும் வீசினர்.

இந்த தாக்குதலில் ஜான் 50, என்பவர் மற்றும் வடமாநில தொழிலாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் சிலர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அதே கும்பல் கடம்போடு வாழ்வு கிராமத்திலும் தாக்குதல் நடத்தியுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து எஸ்.பி., பிரசன்னகுமார் தலைமையில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பத்து மக்கள் இதை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.






      Dinamalar
      Follow us