ADDED : அக் 24, 2024 07:36 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ரோட்டில் திரிந்த மாடு திடீரென ரோட்டின் குறுக்காக ஓடி டூவீலரில் மோதியது. இதில் கல்லுாரி மாணவி கீழே விழுந்து பலத்த காயமுற்றார்.
திருநெல்வேலி திருமால்நகரை சேர்ந்தவர் சுவாதிகா 19. தனியார் கல்லூரி 3ம் ஆண்டு மாணவி. கல்லூரிக்கு தினமும் டூவீலரில் சென்று வருகிறார். நேற்று காலை தியாகராஜநகர் 2வது தெரு வழியாக சென்றபோது ரோட்டில் திரிந்த மாடு திடீரென ரோட்டின் குறுக்காக ஓடியது. இதில் மாடு முட்டியதில் டூவீலரில் சென்ற சுவாதிகா ரோட்டில் விழுந்தார். தலையிலும் உடலிலும் பலத்த காயமுற்றார். பெருமாள்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
2024 ஜூன் 22ல் வண்ணார்பேட்டையில் நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜ் 58, டூவீலரில் சென்றபோது இரண்டு மாடுகள் சண்டையிட்டு ரோட்டில் ஓடி அவரது டூவீலர் மீது மோதின. அவர் நிலை தடுமாறி விழுந்ததில் பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார். திருநெல்வேலியில் ரோட்டில் மாடுகள் திரிவதால் அடிக்கடி இத்தகைய விபத்துக்கள் ஏற்படுகின்றன.

