/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
காதலியின் அண்ணன் அழைத்ததால் வந்த வாலிபர் வெட்டிக்கொலை
/
காதலியின் அண்ணன் அழைத்ததால் வந்த வாலிபர் வெட்டிக்கொலை
காதலியின் அண்ணன் அழைத்ததால் வந்த வாலிபர் வெட்டிக்கொலை
காதலியின் அண்ணன் அழைத்ததால் வந்த வாலிபர் வெட்டிக்கொலை
ADDED : டிச 03, 2024 04:24 AM

திருநெல்வேலி : திருநெல்வேலியில் காதலியின் அண்ணன் போனில் அழைத்ததால் வந்த கள்ளகுறிச்சி வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே முனிவாழையைச் சேர்ந்த ஏழுமலை மகன் விஜயகுமார் 25. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
இவர் திருநெல்வேலி சாந்திநகர் சிம்சோன் என்ற புஷ்பராஜின் தங்கை ஜெனிபர் சரோஜாவை 23, இன்ஸ்டாகிராமில் பழகி காதலித்தார். ஜெனிபர் சரோஜா இன்ஜினியரிங் முடித்து நாகர்கோவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
சில நாட்களுக்கு முன் ஜெனிபர் சரோஜா காதலனுடன் வாழ்க்கை நடத்த சேலம் சென்றார். விஜயகுமாரின் சகோதரி கணவரைப் பிரிந்து அங்கே இருப்பதால் விஜயகுமார் குடும்பத்தினர் ஜெனிபர் சரோஜாவிற்கு புத்திமதி கூறி பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்யலாம் என திருநெல்வேலிக்கு அனுப்பினர்.
விஜயகுமார் வேறு சமூகத்தினர் என்பதால் சிம்சோனுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. ஜெனிபரையும் வேலைக்கும் அனுப்பவில்லை. ஜெனிபர் சரோஜா நவ., 28 எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
ஆத்திரமடைந்த சிம்சோன் விஜயகுமாரை திருநெல்வேலிக்கு வர அழைத்தார். அதை நம்பி நேற்று காலை ரயில் மூலம் விஜயகுமார் நண்பருடன் திருநெல்வேலி வந்தார். ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து அவரை சிம்சோனின் நண்பர் சிவா சாந்திநகருக்கு டூவீலரில் அழைத்து சென்றார்.
சிம்சோனின் மற்றொரு நண்பர் பெயின்டர் சிவா தங்கியிருக்கும் வீட்டு மாடியில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர். அங்கு திட்டமிட்டபடி அரிவாளால் விஜயகுமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். விஜயகுமார் அலறலை கேட்டு அருகில் நின்றவர்கள் பார்த்தனர். உடலை மாடியில் போட்டு விட்டு சிம்சோன், சிவா தப்பினர்.
துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையில் போலீசார் வந்தனர். தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் ஆனந்தி சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். பிறகு போலீசார் சிம்சோன் மற்றும் சிவாவை கைது செய்தனர். ரயில்வே ஜங்ஷனில் நின்ற விஜயகுமார் நண்பரை போலீசார் விசாரித்தனர். விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.