/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அமித்ஷா இன்று திருநெல்வேலி வருகை
/
அமித்ஷா இன்று திருநெல்வேலி வருகை
ADDED : ஆக 22, 2025 12:42 AM

திருநெல்வேலி:தமிழகத்தில் மண்டலங்கள் தோறும் பூத் கமிட்டி மாநாடு நடத்த பா.ஜ.,திட்டமிட்டுள்ளது. முதல் மாநாடு இன்று திருநெல்வேலியில் நடக்கிறது. வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலை முடிவுறும் தச்சநல்லுார் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து விமானத்தில் அமித்ஷா மதியம் 2:50 மணிக்கு துாத்துக்குடி விமான நிலையம் வந்தடைகிறார். ஹெலிகாப்டரில் திருநெல்வேலி ஆயுதப்படை வளாகத்திற்கு 3:10 மணிக்கு வருகிறார்.
பெருமாள்புரத்தில் பா.ஜ.,மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டிற்கு காரில் செல்கிறார். மதியம் 3:20 முதல் 3:50 மணி வரை அங்கு தேனீர் விருந்தில் பங்கேற்கிறார். அங்கிருந்து காரில் கிளம்பி தச்சநல்லுார் மாநாட்டு மேடைக்கு வருகிறார். மாலை 5:30 வரை அதன் நிகழ்வில் பங்கேற்று பேசுகிறார். அங்கிருந்து ஆயுதப்படை மைதானத்திற்கு காரில் வரும் அவர் ஹெலிகாப்டரில் துாத்துக்குடி விமான நிலையத்திற்கு மாலை 6:00 மணிக்கு சென்றடைகிறார். விமானத்தில் டில்லி செல்கிறார். இதற்கான போலீஸ் ஒத்திகைகள் நேற்று நடந்தன. மாநாடு நடக்கும் திடலில் ஏற்பாடுகளை நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டனர்.