/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை இருட்டுக்கடை யாருக்கு சொந்தம் * எழுந்தது மற்றொரு சர்ச்சை
/
நெல்லை இருட்டுக்கடை யாருக்கு சொந்தம் * எழுந்தது மற்றொரு சர்ச்சை
நெல்லை இருட்டுக்கடை யாருக்கு சொந்தம் * எழுந்தது மற்றொரு சர்ச்சை
நெல்லை இருட்டுக்கடை யாருக்கு சொந்தம் * எழுந்தது மற்றொரு சர்ச்சை
ADDED : ஏப் 26, 2025 02:59 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி இருட்டுக்கடை (அல்வா) யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது.
திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோயில் எதிரே அல்வா விற்பனைக்கு பிரசித்தி பெற்ற இருட்டுக்கடை உள்ளது. ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணசிங் 1900ல் இதை துவக்கினார். அவரது மகன் பிஜிலிசிங் தொடர்ந்து நடத்தி வந்தார். பிஜிலிசிங்கிற்கு வாரிசுகள் கிடையாது. பிஜிலிசிங்கின் மனைவி சுலோச்சனா பாயின் அண்ணன் ஜெயராம்சிங் மகள் கவிதாசிங் அதனை தற்போது நடத்தி வருகிறார்.
கவிதாசிங்கின் மகள் கனிஷ்காவுக்கும் கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரியில் திருநெல்வேலியில் திருமணம் விமர்சையாக நடந்தது 41 நாட்களில் கணவரும், மனைவியும் பிரிந்து விட்டனர். மணமகனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளது எனவும், வரதட்சணையாக இருட்டுக்கடையை எழுதி கேட்பதாகவும் கனிஷ்கா போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த விசாரணை ஒருபுறம் நடந்து வருகிறது.
இந்நிலையில் கவிதா சிங்கின் உடன்பிறந்த அண்ணன் நயன்சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிஜிலி சிங்கிக்கு வாரிசுகள் இல்லாததால் அவரது உயில்படி அவரது மைத்துனர் மகனான எனக்கு தான் இருட்டு கடை சொந்தமாகும். இது தொடர்பாக ஏற்கனவே கவிதாசிங் வழக்கு தொடர்ந்துள்ளார். அதனை எதிர்கொண்டு வருகிறோம். உயில்படி தமக்குத்தான் சொந்தம் என்றார்.
கவிதாசிங் மகள் கூறிய வரதட்சணை புகாரில் போலீஸ் விசாரணை என நடக்கும் நிலையில் அவரது உடன்பிறந்த அண்ணனே இருட்டுக்கடை தமக்கு சொந்தம் என செய்தியாளர்களிடம் கூறி வழக்கு தொடர்ந்து இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நயன்சிங் ஏற்கனவே தனியாக லாலா இனிப்பு கடையையும் நடத்தி வருகிறார்.

