/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பாபநாசம் ஆற்றில் விடப்படும் துணிகளால் உயிரிழக்கும் நீர்வாழ் உயிரினங்கள் திடீர் பரிகார முறைக்கு தீர்வு வேண்டும்

ADDED : ஏப் 17, 2025 01:41 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பரிகாரம் என்ற பெயரில் பழைய துணிகள் வீசப்படுவதால் மீன்கள், ஆமைகள் நீர்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கின்றன.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் தான் தாமிரபரணி ஆறு துவங்குகிறது. உலகம்மை பாபநாச சுவாமி கோவிலில் வழிபட்டு பழைய துணிகளை ஆற்றில் விட்டால் நன்மை என சில ஜோதிடர்கள் கூறுவதை நம்பி தினமும் பக்தர்கள் தங்கள் துணிகளை தாமிரபரணி ஆற்றில் விடுகின்றனர்.
சில ஆண்டுகளாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திடீர் நம்பிக்கையால் தாமிரபரணி ஆற்றில் துணிகள் டன் கணக்கில் சேர்ந்து ஆற்றை அசுத்தப்படுத்துகிறது. ஆற்றில் மீன்கள், 150 ஆண்டுகள் வாழும் ஆமைகள் போன்ற தொடர்ந்து உயிரிழக்கின்றன. சமூக ஆர்வலர் மூர்த்தி என்பவர் தொண்டு நிறுவனங்கள் மூலம் அங்கு தினமும் பழைய துணிகளை அள்ளி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறார்.
பாபநாசத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் 100 டன்னுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் மற்றும் துணிக்கழிவுகள் ஆற்றிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 21 நாட்கள் தூய்மை பணிகள் நடக்கிறது.
நன்னீரில் வாழும் ஆமைகள் சுமார் 150 ஆண்டுகள் உயிர் வாழும் தன்மை உடையவை. அவை நதியில் உள்ள தாழம்பூ, தர்ப்பை, சேம்பு செடிகளுக்குள் இனவிருத்தி செய்யும். ஒரு ஆமை தனது வாழ்நாளில் ஒரு அணையில் தேக்கப்படும் அளவு தண்ணீரை இயற்கையாக சுத்தம் செய்யும் திறன் கொண்டது. இவை அழிந்தால், தாமிரபரணியின் நீர்த்தரமும் பாதிக்கப்படும்.
மேலும், பாபநாசத்தில் நடைபெறும் சித்திரை திருவிழாவிலும், மே 4- கும்பாபிஷேகத்திற்கும் வரும் பக்தர்கள் இவ்வாறு துணிகளை விட்டால் பெரும் சிரமம் ஏற்படும்.
இதனைத் தடுக்க, தூய்மைப் பணியை மே 7, 2025 முதல் பாபநாசத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புனித பணியில் அனைவரும் பங்கேற்குமாறு மூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்,