/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
லஞ்ச பணத்துடன் சிக்கிய உதவி கமிஷனர் சஸ்பெண்ட்
/
லஞ்ச பணத்துடன் சிக்கிய உதவி கமிஷனர் சஸ்பெண்ட்
ADDED : டிச 08, 2024 12:16 AM

திருநெல்வேலி:ஊட்டியில் 11 லட்சத்து 70 ஆயிரம் லஞ்சப்பணத்துடன் சிக்கிய உதவிகமிஷனர் ஜஹாங்கீர் பாஷா சஸ்பெண்ட்செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் மேலப்பாளையம் உதவி கமிஷனராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா; பின்னர் ஊட்டி நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த மாதம் லஞ்சமாக வசூலித்த ரூ. 11 லட்சத்து 70 ஆயிரத்துடன் காரில் சென்னை செல்லும் வழியில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார். பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
எந்தெந்த முறைகேட்டுக்கு வாங்கப்பட்ட பணம் எவ்வளவு என்ற பட்டியலையும் அவர் கொடுத்தார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த அவர் திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி கமிஷனராக மீண்டும் நியமிக்கப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.அவர் திருநெல்வேலி மாநகராட்சியில் பணியில் சேர வந்தபோது கமிஷனர் சுகபுத்ரா அவரை பணியில் சேரவிடாமல் திரும்ப அனுப்பினார்.இதனிடையே ஜஹாங்கீர் பாஷா, நவ. 29ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக நகராட்சிகளின் நிர்வாக ஆணையர்எஸ்.சிவராசு உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.