/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சிறுநீரக மாற்று சிகிச்சையில் 3வது இடம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு விருது
/
சிறுநீரக மாற்று சிகிச்சையில் 3வது இடம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு விருது
சிறுநீரக மாற்று சிகிச்சையில் 3வது இடம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு விருது
சிறுநீரக மாற்று சிகிச்சையில் 3வது இடம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு விருது
ADDED : செப் 24, 2024 08:01 PM
திருநெல்வேலி:மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரக மாற்று ஆப்பரேஷனில் தமிழகத்தில் மூன்றாம் இடம் பெற்ற திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் விருது வழங்கினார்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மூளைச்சாவு ஏற்பட்ட நோயாளிகளிடம் இருந்து உறுப்புகள் தானம் பெறப்பட்டு தகுதி வாய்ந்த நோயாளிகளுக்கு பொருத்தப்படுகின்றன.
கடந்த 2019ம் ஆண்டு முதல் இந்த ஆண்டில் இதுவரை மூளைச்சாவு ஏற்பட்ட 14 பேரிடம் இருந்து தானம் பெறப்பட்ட ஆறு இதயங்கள், நான்கு நுரையீரல்கள், 12 கல்லீரல்கள், ஆறு தோல்கள், 26 கண் கருவிழிகள் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. மூளைச்சாவு ஏற்பட்டவர்களிடம் இருந்து 22 சிறுநீரகங்கள், தானம் பெறப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளன.
மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து 2023-2024ல் தானம் பெறப்பட்ட சிறுநீரகங்களை நோயாளிகளுக்கு பொருத்தியதில் தமிழகத்தில் மூன்றாவது இடம் பெற்ற திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்னையில் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் விருது வழங்கி பாராட்டினார்.
டீன் ரேவதிபாலன், உதவி முதல்வர் சுரேஷ்துரை, துறைத்தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.