ADDED : மார் 17, 2026 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மதுபோதையில் தகராறு செய்த நபரை கட்சியினர் கடுமையாக தாக்கினர்.
தாழையூத்து மெயின் பஜார் பகுதியில் நா.த., வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் கட்சி பிரமுகர் துரைமுருகன் பேசினார். அப்போது அங்கிருந்த நபர் துரைமுருகனை குடிபோதையில் அவதுாறாக பேசினார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். போலீசார் அவரை மீட்டு வெளியே அழைத்து சென்றனர்.

