/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கோர்ட் முன்பு கொலையான வாலிபர் உடல் ஒப்படைப்பு
/
கோர்ட் முன்பு கொலையான வாலிபர் உடல் ஒப்படைப்பு
ADDED : டிச 23, 2024 12:25 AM

திருநெல்வேலி; திருநெல்வேலி கோர்ட் முன்பாக டிச., 20ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தத்தை சேர்ந்தவர் மாயாண்டி 23. 2023 ஆக., 13ல் கீழநத்தத்தில் ராஜாமணி என்பவரது கொலை வழக்கில் கைதானார்.
ஜாமீனில் வந்தவர் வேறு வழக்கு ஒன்றில் ஆஜராக டிச., 20 காலை 10:00 மணிக்கு திருநெல்வேலி கோர்ட்டுக்கு வந்தார். கோர்ட் முன்பாக மெயின் ரோட்டில் வழிமறித்த கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது. இந்த சம்பவத்தில் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட ராஜாமணியின் தம்பி மனோராஜ் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாயாண்டியின் உடலை அவரது குடும்பத்தினர் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற மறுத்தனர்.
போலீஸ் அதிகாரிகள், தாசில்தார் முன்னிலையில் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. நேற்று மாலை மாயாண்டியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊர் கீழநத்தத்தில் இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.