/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பாலச்சுவரில் டூவீலர் மோதி சிறுவன் பலி
/
பாலச்சுவரில் டூவீலர் மோதி சிறுவன் பலி
ADDED : மே 09, 2025 03:25 AM
திருநெல்வேலி:நாங்குநேரி அருகே டூவீலர் விபத்தில் சிறுவன் பலியானார். இன்னொருவர் காயமுற்றார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த முருகேசன் மகன் சுரேஷ் 17. அதே பகுதியை சேர்ந்த சுடலைமுத்து மகன் சதீஷ் 18. நண்பர்கள். படிப்பை பாதியில் விட்டுவிட்டனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சுரேஷ் தனது மோட்டார் சைக்கிளில் டூவீலரில் சதீஷ் உடன் கோயிலுக்கு சென்றார். திருநெல்வேலி -- நாகர்கோவில் நான்குவழிச்சாலையில் தனியார் மில் அருகே சென்ற போது டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து பாலச்சுவரில் மோதியது. இதில் சுரேசும், சதீசும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். சதீஷ் பலத்த காயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாங்குநேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

