ADDED : ஜூலை 11, 2026 02:03 AM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தவர் இலியாஸ் அகமது 59. இவர் வாகன சோதனையின் போது லாரி டிரைவர்களிடம் லஞ்சம் பெற்றதாக ஒரு வீடியோ உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய், இலியாஸ் அகமதுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இலியாஸ் அகமது பணி ஓய்வு பெற 8 மாதங்களே இருந்தன.
