வள்ளியூரில் உடைந்த நிலையில் பாங்க் ஏ.டி.எம்.,கண்ணாடி கதவு
வள்ளியூரில் உடைந்த நிலையில் பாங்க் ஏ.டி.எம்.,கண்ணாடி கதவு
ADDED : மே 26, 2011 02:45 AM
வள்ளியூர் : வள்ளியூர் கனரா பாங்க் ஏடிஎம்ல் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ள
கண்ணாடி கதவை மாற்ற வாடிக்கையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வள்ளியூர் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே கனரா பாங்க் ஏடிஎம் உள்ளது. பஸ்
ஸ்டாண்டிற்கு எதிரே உள்ளதால் இந்த ஏடிஎம்மை அனைத்து பாங்க்
வாடிக்கையாளர்களும் பணம் எடுக்க பயன்படுத்தி வருகின்றனர். இதனால் எப்போது
இந்த ஏடிஎம்மில் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் இந்த ஏடிஎம்
கண்ணாடி கதவு உடைந்து ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டிருக்கிறது.
இதனால் ஏடிஎம் உள்ளே பாங்க் வாடிக்கையாளர்கள் செல்ல பயந்து வேறு
ஏடிஎம்மிற்கு செல்கின்றனர். இந்த கண்ணாடி கதவு உடைந்து சில நாட்களாகியும்
பாங்க் நிர்வாகம் அதனை சீரமைக்கவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில்
பணம் எடுக்க பயந்து கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த ஏடிஎம் அருகில்தான்
கனரா பாங்க்கும் உள்ளது. இந்த பாதையில்தான் பாங்க் ஊழியர்கள் செல்ல
வேண்டும். ஆனால் பாங்க் ஊழியர்கள் கண்ணாடி கதவு உடைந்திருப்பதை கண்டு
கொள்ளவில்லை என்று பாங்க் வாடிக்கையாளர்கள் வருத்தப்படுகின்றனர். உடனடியாக
கண்ணாடி கதவை சரிசெய்ய வாடிக்கையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
