/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தங்கை தற்கொலையால் அண்ணனும் தற்கொலை
/
தங்கை தற்கொலையால் அண்ணனும் தற்கொலை
ADDED : ஏப் 23, 2025 03:09 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே தங்கை தற்கொலை செய்த துக்கத்தில் அண்ணனும் தற்கொலை செய்து கொண்டார்.
விக்கிரமசிங்கபுரம் மில்கேட் அடிவாரம் ராமையா மகள் பத்மாராணி 36. இவரது கணவர் வேம்பையாபுரம் ஆறுமுகம். சில நாட்களாக பத்மாராணி வயிற்று வலியால் அவதியுற்றார். வலி தாங்காமல் வேம்பையாபுரம் வீட்டில் குளியல் அறையில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார். இதனால் பத்மராணியின் உடன் பிறந்த அண்ணன் துரை 50, மனம் உடைந்து காணப்பட்டார். அவரும் தற்கொலை செய்து கொள்ள மதுவில் விஷம் கலந்து குடித்தார். ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரித்தனர்.

