ADDED : ஜூலை 05, 2026 11:22 PM
அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கடையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட சிவசைலம் பிரிவு, ஆம்பூர் பீட் வெளிமண்டலப் பகுதியான சங்கரபாண்டியபுரத்தில் நடமாடி வந்த கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு அமைத்து கண்காணித்து வந்தனர்.
நேற்று முன்தினம் மதியம் 1:30 மணிக்கு 4 வயது ஆண் கரடி கூண்டில் சிக்கியது.
களக்காடு ,முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் முன்னிலையில் வனக் கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்தார்.
இதன் பின் முண்டந்துறை வனச்சரகத்துக்கு உட்பட்ட கொடமாடிவழி சரக வனப்பகுதியில் கரடி விடுவிக்கப்பட்டது.கரடி வனப்பகுதிக்குள் சென்றதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
