/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லையில் இளையராஜா கச்சேரி குறுகிய சாலையில் நடத்த முடியுமா?
/
நெல்லையில் இளையராஜா கச்சேரி குறுகிய சாலையில் நடத்த முடியுமா?
நெல்லையில் இளையராஜா கச்சேரி குறுகிய சாலையில் நடத்த முடியுமா?
நெல்லையில் இளையராஜா கச்சேரி குறுகிய சாலையில் நடத்த முடியுமா?
ADDED : ஜன 15, 2025 11:56 PM

திருநெல்வேலி : திருநெல்வேலியில் நாளை இளையராஜாவின் இசைக்கச்சேரி நடக்கிறது. விழா நடக்கும் பகுதி மிகவும் குறுகலான இடத்தில் அமைந்துள்ளதால், விழாவை நடத்த முடியுமா என பலரும் ஆச்சர்யம் தெரிவிக்கின்றனர்.
மதுரை - கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையில், ரெட்டியார்பட்டி அருகே முத்துார் கிராம சாலையில், இளையராஜாவின் இசைக் கச்சேரி நடக்கிறது. 10,000 இசை ரசிகர்கள் இதுவரை டிக்கெட் பெற்றுள்ளனர்; 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் வர வாய்ப்புள்ளது.
நாளை மாலை 6:00 மணி துவங்கி இரவு 10:00 மணி வரை கச்சேரி நடக்கிறது. ஏராளமான வாகனங்களில் ரசிகர்கள் வருவர். ஆனால், ஒரே ஒரு சிறிய சாலையில் சென்று அதிலேயே திரும்ப வேண்டிய நிலை உள்ளது.
இதனால், ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில், மலையின் குறுக்காக பாதை அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகம் துவங்கி, ரெட்டியார்பட்டி பாலம் வரையிலும் நாளை மாலை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.
கச்சேரி நடப்பது திருநெல்வேலி மாநகரத்தை ஒட்டியுள்ள மாவட்ட பகுதி. எனவே, பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும் மாநகர போலீசாரும் இணைந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என எதிர்பார்ப்பு உள்ளது.
மேலும் ஒரே ஒரு சாலை மட்டும் இருப்பதால், மாற்றுப் பாதை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

