ADDED : ஜூன் 25, 2025 01:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே நான்கு வழிச்சாலையில் கார் மீது மோதிய லாரி கவிழ்ந்ததில் கார் பலத்த சேதமடைந்தது.
திருநெல்வேலியில் மதுரை நான்கு வழிச் சாலை தாழையூத்து அருகே குறிச்சி குளம் பகுதியில் நேற்று மதியம் ஒரு குவாரியில் இருந்து ஜல்லிக்கல் ஏற்றிய லாரி, குறிச்சிகுளம் திருப்பத்தில் வந்தது. அப்போது தாழையூத்திலிருந்து வந்த கார் திடீரென ரோட்டின் நடுப்பகுதிக்கு சென்றதால் இரு வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் கார் மீது மோதிய லாரி தலைகீழாக கவிழ்ந்ததில் கார் நசுங்கியது. காரை ஓட்டிய நாராயணசாமி படுகாயமடைந்தார். பல்டியடித்து கார் மீது கவிழ்ந்த லாரி டிரைவர் செல்வமும் காயமடைந்தார். தாழையூத்து போலீசார் விசாரித்தனர்.