/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பல அதிகாரிகளுக்கு உத்தரவு போட்ட போலி ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது வழக்கு
/
பல அதிகாரிகளுக்கு உத்தரவு போட்ட போலி ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது வழக்கு
பல அதிகாரிகளுக்கு உத்தரவு போட்ட போலி ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது வழக்கு
பல அதிகாரிகளுக்கு உத்தரவு போட்ட போலி ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது வழக்கு
ADDED : செப் 20, 2024 01:58 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தைச் சேர்ந்தவர் ரூபிநாத், 48, பள்ளி நடத்தி வருகிறார். பா.ஜ., அயலக அணி மாவட்ட தலைவர்.
சில மாதங்களுக்கு முன் இவரது பள்ளியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த எம்.பில்., பட்டதாரி மங்கையர்கரசி, 44, ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். இவர் கணவரை பிரிந்தவர்; திருநெல்வேலியில் ரூபிநாத்துடன் வசித்தார்.
நேற்று முன்தினம் இருவரும் துாத்துக்குடி எஸ்.பி., ஆல்பர்ட் ஜானை, சந்தித்து மனு அளித்தனர். அப்போது, மங்கையர்க்கரசி, உத்தரபிரதேச மாநிலத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி என கூறினார்.
மேலும், உடன் வந்து இருந்த ரூபிநாத்தைக் காட்டி, 'இவருக்கு, புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் 6 லட்சம் ரூபாய் தராமல் ஏமாற்றி வருகிறார். அதை பெற்றுத்தர வேண்டும்' என்றார். கேட்டுக் கொண்டார்.
அப்போது, எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் கேட்ட சில கேள்விகளுக்கு, மங்கையர்கரசி தவறாக பதில் சொன்னதாக தெரிகிறது.
குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட்ட எஸ்.பி., பின், அவரை கைது செய்ய உத்தரவிட்டார். அவருடன் வந்திருந்த பா.ஜ., பிரமுகர் ரூபிநாத்தும் கைது செய்யப்பட்டார். ரூபிநாத் துாத்துக்குடி பேரூரணி சிறையிலும், மங்கையர்கரசி திருநெல்வேலி கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் குறித்து போலீசார் கூறியதாவது:
ரூபிநாத்தும், மங்கையர்கரசியும் தாழையூத்தில் வசிக்கின்றனர். ரூபிநாத் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
அதற்காக மங்கையர்கரசி, திருநெல்வேலி தாசில்தார், வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர் என, பலருடனும் தினமும் போனில் பேசி மிரட்டல் விடுத்து வந்தார். ஆனால், நெல்லை அதிகாரிகள் அந்த பெண்ணின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க முன்வரவில்லை.
துாத்துக்குடியில் எஸ்.பி.,யிடம் நேரடியாக சிக்கி, கைதான பிறகுதான், திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து போலீசார் உஷாராகி, அந்த பெண்மீது நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த சில மாதங்களாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி எனக் கூறி, வருவாய், போலீஸ், சிப்காட் என பலரையும் ஏமாற்றியும், மிரட்டியும் வந்த பெண், இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.